Unordered List

22 ஆகஸ்ட் 2024

Super Mario மற்றும் Prince of persia

Super Mario மற்றும் Prince of persia இவையிரண்டும் ஆரம்பகால கம்ப்யூட்டர் கேம்கள். நாங்கள் படித்த கம்ப்யூட்டர் செண்டர் கப்ம்யூட்டர்களில் ஒளித்துவைத்து கொஞ்சம் அனுமதி கேட்டு விளையாடி பழகியது.


ஆரம்பத்தில் prince விளையாடவே. பிடிக்கும் காரணம் prince of persia கொஞ்சம் மேம்பட்ட விளையாட்டு. அதன் அரபு இசை, கத்திச்சண்டை, கொஞ்சம் யோசிக்கவைக்கும் தடைகள் எல்லாம், ஒப்பிட mario கொஞ்சம் சின்னப்புள்ளதனமாக இருக்கும், அந்த கார்டூன் ஸ்டைல் இசை, தாவிச்செல்லும் கேம்ப்ளே என. ஆனால் இரண்டும் அந்த ஆரம்ப ஆர்வம் கடந்தபின் பார்த்தால் mario விளையாடுவதே ஜாலியா இருக்கும், அதுவே பெட்டர்.

அதற்குக் காரணம் இப்போது யோசித்துப்பார்த்தால் இவையிரண்டுக்கும் முக்கிய வித்தியாசம் இருக்கிறது.

Prince of persiaல் ஒவ்வொரு எதிரியையும் எதிர்கொண்டு சண்டைபோட்டு கொன்று தான் கடக்கமுடியும் அது மிக சுவாரஸ்யமான கத்திச்சண்டையாக இருக்கும் என்பது உண்மை தான், ஆனாலும் marioல் அந்த அவசியம் இல்லை, அவ்வப்போது சண்டை செய்யலாம் என்றாலும் பெரும்பாலும் எதிரிகள் மீது ஜப்ம் செய்து தாவிச் செல்லலாம், மிக க்யூட்டாக.

இன்றைய கனெக்டட் உலகில் பலரும் கொந்தளித்துக்கொண்டேயிருப்பதை கவனிக்க் முடிகிறது, ஒவ்வொரு நாளும் உருவாக்கப்படும் பரபரப்புகளை ஒன்றுவிடாமல் தங்கள் அறிவால், லாஜிகல் ஸிஸ்டத்தால் எதிர்கொண்டு கத்திச்சண்டையிடும் prince of pereia வழி அது. அது தவறல்ல, அது ஒரு தேர்வு. ஆனால் தினந்தோறும் கொந்தளிப்புக்கான உத்திரவாதம் அது.

இப்போதெல்லாம் ஏதாவது ஒரு பரபரப்பு நிகழும்போது அதைப்பற்றி காண்டெக்ஸ்ட் தெரியாமல் இருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது



உண்மையில் mario வழியே நம் கிட்னிக்கு நல்லது. பெரும்பாலான பரபரப்புகளை ஜம்ப் செய்து, நமக்கான பரபரப்பை மட்டும் செலக்ட் செய்வது.